காளிகேசம் அருவி
காளிகேசம் அருவி
மாவட்டம் : கன்னியாகுமரி
இடம் : தோவாளை
முகவரி : தோவாளை தாலுக்கா, பூதப்பாண்டி, கன்னியாகுமரி.
தாலுகா : தோவாளை
இயற்கை கொட்டிக்கிடக்கும் காளிகேசம் அருவி, குமரி மாவட்டம் தோவாளை தாலுக்காவில் பூதப்பாண்டி என்னுமிடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
மலையின் நீருற்றுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆறு, மலைச்சரிவுகளில் வழிந்தோடி அருவியாக கொட்டும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது.
இந்த அருவியின் தண்ணீர் தெளிவாகவும், குளிர்ச்சியாகவும் எப்போதும் வற்றாமல் இருப்பது தான் இதன் சிறப்பு.
சுத்தமான மூலிகை கலந்த நீரும், மாசு கலக்காத காற்றும் நம் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
இதனருகில் போட்டாணி குகை அமைந்துள்ளது. இது தற்போது சுற்றுலா பயணிகளுக்கு சமையல் செய்து சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
இங்குள்ள வனப்பகுதியில் பச்சை பசேலென உயர்ந்த மரங்கள், மேகங்கள் தழுவிச்செல்லும் வானுயர் மலைகள் மற்றும் சலசலக்கும் நீரோடைகள் என்று எழில்மிகு காட்சி மனதை கொள்ளை கொள்கிறது.
அருவியின் சிறப்புகள் :
மூலிகை கலந்த நீர்...
மாசு கலக்காத காற்று...
குளுமையான சூழல்...
பச்சை பசேலென உயர்ந்த மரங்கள்...
மேகங்கள் தழுவிச்செல்லும் வானுயர் மலைகள்...
சலசலக்கும் நீரோடைகள்...
எப்படி செல்வது?
குமரி மாவட்டம் தோவாளை தாலுக்காவில் உள்ள பூதப்பாண்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது.
இயற்கை எழிலை ரசித்து, சில்லென வீசும் காற்றை சுவாசித்து மனதிற்கு மகிழ்ச்சி தரும் இடமாக காளிகேசம் அருவி திகழ்கிறது...

Comments