கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்


கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். 

பொது விவரங்கள்:

தலைநகரம் :நாகர்கோவில்

பரப்பு :1,684 ச.கி.மீ

மக்கள் தொகை :18,63,174

ஆண்கள் :9,36,374

பெண்கள் :9,26,800

பெயர் வரலாறு:

சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

புவியியல்:

இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9மூ விவசாய நிலமாகவும், 32.5மூ அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.

தட்பவெப்ப நிலை:


கடந்த ஐம்பது ஆண்டு கால ஆய்வில், வடகிழக்கு பருவக்காற்று வீசும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, 24 மழை நாட்களில் 549 மி.மீ மழையும், தென்மேற்கு பருவக்காற்று வீசும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது. இதுவே மார்ச் முதல் மே மாதம் வரையிலான வெனிற் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. மாவட்டத்தின் ஈரப்பதம் 60 முதல் 100 சதவிகிதமாக இருக்கிறது.

ஆறுகள்:

இம்மாவட்டத்தின் முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன.

மருத்துவ வரலாறு:

இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற புயனொய ஆயனாயயெ மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

பண்பாடு:

இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது.

பொருளாதாரம்:

தமிழ்நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும்:

குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்குபொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 ரப்பர்:

ரப்பர் உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

பழங்கள்:

நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் பிடிப்பு:

கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநு}றுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி:

கல்வியறிவு விகிதத்தில் (91.75 மூ) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

பககவதி அம்மன் கோவில்

பககவதி அம்மன், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று. கோயிலின் உற்சவ மூர்த்தியின் பெயர்கள் தியாக சௌந்தரி, பால சௌந்தரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். 1000-2000 ஆண்டு பழமையான கோயில்.

விவேகானந்தர் பாறை :

விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்:


விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்தி சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐயன் திருவள்ளுவர் சிலை:

ஐயன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக்கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது.

சிலை குறிப்புகள்:

1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி

2. சிலையின் உயரம் - 95 அடி

3. பீடத்தின் உயரம் - 38 அடி

4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்

6. சிலையின் எடை - 2,500 டன்

7. பீடத்தின் எடை - 1,500 டன்

8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

 காந்தி மண்டபம், கன்னியாகுமரி:

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபம் 1956ம் ஆண்டு கட்டப்பட்டது. இம் மண்டபத்தில் உள்ள மைய கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருந்த இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பாகும். இது காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்வையாளர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

பத்மநாபபுரம் அரண்மனை:

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரிலிருந்து கேரளா தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இதுமேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

முட்டம் கடற்கரை:

முட்டம் கடற்கரை தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கன்னியாகுமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இவ்வூரின் கடற்கரை இயற்கை எழில் மிகுந்தது. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

முக்கடல் அணை:

முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் நாகர்கோவில் நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.

குறிப்பிடத்தக்கவர்கள்:

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்தார். 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நு}ற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.

Comments

Popular posts from this blog

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான விந்து இதுவரை கண்டிராத பழமையானது.

IPL schedule - 2020