இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும்


 இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2012-ஆம் அண்டு முதல் 2017-ஆம் ஆண்டு முதல் பொறியியல்  இறுதியாண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் அரியர் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இறுதி செமஸ்டரில் அரியர் வைத்துள்ள  மாணவர்கள் வரும் 15-ஆம் தேதி துவங்கி  17-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும்  செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது அதேபோல இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 22-ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான விந்து இதுவரை கண்டிராத பழமையானது.

IPL schedule - 2020