மன அழுத்தத்தை விரட்டியடியுங்கள்




வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

எந்த ஒரு வேலையையும் முன் கூட்டியே திட்டமிடுங்கள். செல்லவேண்டிய இடத்திற்கு சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் கணவன்/மனைவி அல்லது நண்பர்களிடம் பகிருங்கள்.

எல்லா வேலைகளையும் ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

மன அழுத்தம் ஏற்படும் பொது நகைச்சுவை சினிமாக்கள் பார்க்கலாம். உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு மூட்டுபவர்களுடன் உரையாடலாம். சிரித்தே மன உளைச்சலை அகற்றிவிட முடியும்.

இசை மற்றும் பிடித்த பாடல்களை கேட்பதும், பிடித்த பாடல்களைப் பாடுவதும் மனதை லேசாக்கும்.

மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது.

பழச்சாறுகள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் நண்பரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கும்.

தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். மனஅழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

நவராத்திரி நோன்பு

அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு