கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். பொது விவரங்கள்: தலைநகரம் :நாகர்கோவில் பரப்பு :1,684 ச.கி.மீ மக்கள் தொகை :18,63,174 ஆண்கள் :9,36,374 பெண்கள் :9,26,800 பெயர் வரலாறு: சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து. புவியியல்: இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9மூ விவசாய நிலமாகவும், 32.5மூ அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது. தட்பவெப்ப நிலை: ...






















Comments