நவராத்திரி நோன்பு
அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆனால் நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும். இவற்றில் புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. அதிலும் அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி விரதமாக புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள். வசந்த நவராத்திரி என்பது கானகத்தில்,...